Breaking News

16 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் ஜூலை 16 முதல் 9, 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு. ஜூலை 16 முதல் கல்லூரிகளும் திறக்கப்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. 

புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அன்றைய தினமே கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Share this