தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
தமிழக உள் மாவட்டங்களிலும், மன்னார் வளைகுடா பகுதியிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தாலும், இன்று,
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி,
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை
மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வானிலை ஆய்வு மையம் அறிக்கை
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: தமிழக செய்திகள்