Breaking News

BREAKING NEWS: தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு



அளிக்கபட்ட தளர்வுகள் முழு விவரம்


தமிழ்நாட்டில் தற்போது நோய்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. 

எனவே இந்த மாவட்டங்களில் நோய்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் அதே சமயம் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. 

தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும்

காய்கறி, பழங்கள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 

இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனை மட்டும் அனுமதிக்கப்படும். 

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

இந்த 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்:


காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகைகடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி!

நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதி

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி 

இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்


மின் பணியாளர் பிளம்பர்கள், கணினி மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதி. 

மின் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. 

மிதிவண்டி மற்றும் இருசக்ர வாகனங்கள் பழுதி நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. 

ஹார்டுவேர் கடைகள் செயல்பட அனுமதி. 

வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி செயல்பட அனுமதி. 

கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுபொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி. 

வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதி. 

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி. 

மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று நபர்களும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பேர் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

50 % சதவீத பத்திரப்பதிவுக்கு தமிழக அரசு அனுமதி

ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

ஏற்றுமதி நிறுவனங்கள் 10% பணியாளர்களுடன் இயங்கலாம்!

நீடிக்கும் தடை முழு விவரம்:


வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தொடர்ந்து தடை நீட்டிப்பு

டாஸ்மாக் திறக்க தடை

பொது போக்குவரத்திற்க்கு தடை

சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு

சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை

டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை. 

அழகு நிலையங்கள், திறக்க தடை

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க தடை. 


நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை.

தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு


https://drive.google.com/file/d/1baj9eseuVh4PvYNTpwilt1nvxSGkWpZe/view?usp=sharing



Tags: தமிழக செய்திகள்

Share this