பொருளாதார உதவி தேவையா? உதவி செய்ய நாங்க இருக்கோம்: உதவி தேவைப்படுவோரும், உதவி செய்ய காத்திருப்போரும் தொடர்பு கொள்ளலாம்
அட்மின் மீடியா
0
V for All எல்லோருக்காக நாம்
ஏழைகளை தேடிச் சென்று உதவி செய்யும் கனவான்களே உங்களுக்கு தெரியுமா
உங்களுக்கு அருகாமையில் இருக்கின்றவர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்
அவர்களுக்கு பொருளாதார உதவி தேவைப்படும் ஆனால் கைநீட்டி வாங்குவதற்க்கும், சத்தமிட்டு கேட்பதற்க்கும், வரிசையில் நின்று பெறுவதற்க்கும் தன்மானம் தடுக்கும் அவர்களுக்கு
வீட்டு வாடகை
மின்சார கட்டணம்
பெண் பிள்ளைகளுக்கான தேவைகள்
பிள்ளைகளுக்கான கல்வி கட்டண தேவைகள்
வீட்டில் இருக்கும் வயோதிக பெற்றோர்களின் தேவைகள்
மருத்துவ தேவைகள்
இப்படி பல தேவைகள் உள்ளது இந்த தேவைகள் எல்லாம் யாரிடம் சென்று சொல்லி உதவி தேடுவது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு உதவிடத்தான் இந்த V for All எல்லோருக்காக நாம் என்கின்ற அமைப்பு.
அல்லாஹ்வின் திரு பொருத்ததிற்க்காவும் , மறுமையின் நன்மைக்காவும் செயல் படும் கூட்டத்தில் இவர்களும் ஒன்று
V for All அமைப்பின் பணி என்ன?
ஈகை குணம் கொண்ட நன்மக்களின் ஆதரவோடு அவர்களின் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருளாதாரத்தை ஏற்பாடு செய்வதற்கு இந்த V for All முயற்சி செய்கின்றார்கள்
வறுமையின் சிரமத்தில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவி செய்ய அந்த குடும்பங்களை சில மாதங்களுக்கு தத்து எடுக்க விரும்பும் தான தர்ம உதவி செய்பவர்களுக்கு வறுமையில் மிகவும் சிரமப்படும் குடும்பங்களை இந்த V for All அமைப்பு அடையாளம் காட்டுகின்றது
அதாவது பொருளாதார தேவை உடையோரும், பொருளாதார உதவி செய்ய நினைப்பவரும் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.உங்கள் மத்தியில் அவர்கள் பாலமாக இருந்து உதவுவார்கள்
இப்படி சமூகத்தில் பல குடும்பங்களின் நிலைகளை அறிந்து அவர்களின் சரியான தேவைகளை கண்டறிந்து குடும்பத்தின் மூத்த அண்ணனாக அவர்களுடைய தேவைகளை முடிந்த வரை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடனும், இறை பொருத்தத்திற்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் எங்கள் சேவைகளில் நீங்களும் இணைந்து கரம் கோர்த்து மனிதம் காக்க நீங்கள் தயாரா
கஷ்ட்டப்படும் குடும்பங்களின் தேவைகளை அறிந்து அந்த குடும்பங்களை இந்த லாக் டவுன் காலம் முடியும் வரை தத்தெடுக்க முன் வருபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். அது ஒரு குடும்பமோ அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களோ உங்கள் விருப்பம் போல தத்தெடுக்கலாம். உங்கள் சக்திக்கேற்றவாறு பொறுப்பு எடுக்கலாம்
இந்த அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமானது. எனவே உங்களில் யார் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறீர்களோ அவர்கள் இவர்களை தொடர்பு கொள்ளுலாம்.
அதேபோல் யாரெல்லாம் யாருக்கு உதவி செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களோ அவர்களும் இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்த மக்கள் சேவைகளை செய்து மனிதம் காப்போம்.
உதவி தேவைப்படுவோரும், உதவி செய்ய காத்திருப்போரும் தொடர்பு கொள்ளலாம்
தொடர்புக்கு:
7824 022 022
மேலும் விவரங்களுக்கு:
Tags: மார்க்க செய்தி