BREAKING : புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமித்தது செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுவை சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது.புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி, கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில் மத்திய அரசு அறிவித்துள்ள 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனஉத்தரவை செல்லாது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது
Tags: தமிழக செய்திகள்