பராமரிப்புக்காக ரேஷன் கார்டு இணையதளம் தற்காலிக நிறுத்தம்
அட்மின் மீடியா
0
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க ரேஷன் கார்டு அவசியம் அதற்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் www.tnpds.gov.in என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் அந்த இணையதளத்தில் ,பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் என பல பணிகளும் அந்த இணையதளத்தில்தான் நடந்து வருகின்றது
இந்நிலையில் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிக்காக இணையதள சேவை, நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கூடிய விரைவில் சரி செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்Tags: தமிழக செய்திகள்