தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு
அரசு அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் எனவும் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகள் இனி செயல்பட கூடாது.
அங்கீகாரம் இல்லாத பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அதுவலரே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிமுறையை நடைமுறைப்படுத்த மறந்த கல்வி அலுவலர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்