Breaking News

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இ-பதிவு அவசியம் – முழு விவரம்!!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி வரை தளர்வுகளுடன் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


தமிழக அரசு தற்போது மாநிலத்தில் நிலவும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூன் 28 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதிய ஊரடங்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளும் ஏதும் அளிக்கப்படவில்லை. 

பாதிப்புகள் குறைவாக காணப்படும் 23 மாவட்டங்களுக்கு சிறிய அளவில் தளர்வுகள் 

மற்றும் மிக குறைந்த பாதிப்புகள் காணப்படும் 4 மாவட்டங்களில் அதிக அளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. 


இந்த செய்தியையும் படியுங்க

BREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்


சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வாடகை வாகனங்கள், டேக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். 

டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி.

பாதிப்பு குறைவாக காணப்படும் வகை 2 மற்றும் 3ல் குறிப்பிட்டுள்ள மொத்தம் 27 மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று திருமண நிகழ்வுகளுக்கு பயணம் செய்ய அனுமதி. 


மேலும் இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணைய வழியாக https://eregister.tnega.org விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதி.

வகை 2ல் வகைப்படுத்தப்பட்டிருக்கும் 23 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். 

டேக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback