Breaking News

BREAKING தமிழகத்தில் ஜூன் 28ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு... முழு விவரம்

அட்மின் மீடியா
0

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிப்பு.ஊரடங்கு நீடிக்கப்பட்டது. 

 


தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 வகை 1 

11 மாவட்டங்கள் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் 

வகை 2 

23 மாவட்டங்கள் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள். 

வகை 3 

4 மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மட்டும்

 

இதில் வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளோடு ஊரடங்கு நீடிக்கும்.தளர்வுகள் ஏதும் இல்லை

வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளோடு, பூக்கடை, காய்கறி, பழ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், உணவகங்கள், இனிப்பு கடைகள், பேக்கரி மற்றும் மற்ற கடைகள் இரவு 9 மணி வரையிலும் செயல்பட அனுமதி


வகை 2 இல் அளிக்கபட்டுள்ள தளர்வுகள் என்ன: 

 

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர்.ஆகிய 23 மாவட்டங்களில்

மளிகை, பலசரக்குள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி. 

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைச் செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம். 

உணவகங்கள் மற்றும் அடுமனைகள் மற்றும் மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை செயல்படலாம். 

அரசின் அத்தியாவசியத் துறை அலுவலகங்கள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. 

இதர அரசு அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்படலாம். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்கலாம். 

தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும். 

மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். 

மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் செயல்பட அனுமதி. 

ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்பட இயங்கலாம். கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம். 

வாகன வினியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி. 

மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படலாம். 

மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. 

அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாக பணிகளுக்கு மட்டும் அனுமதி. 

திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். 

விளையாட்டு பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் செயல்படக் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். 

வாடகை டேக்ஸிகள், ஆட்டோக்களின் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதி.

 

வகை 3 இல் அளிக்கபட்டுள்ள தளர்வுகள் என்ன:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அளிக்கபட்டுள்ள தளர்வுகள்

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். 

இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். 

அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும். 

அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும். 

மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர். 

மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். • ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள்காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் கடைகள். தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள்காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல்மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை7.00 மணி வரை அனுமதிக்கப்படும்

கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்

மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

கொரோனா தொற்று குறைவாகவுள்ள 4 மாவட்டங்களில் 50 % பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி,கொரோனா தொற்று குறைவாகவுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 27 மாவட்டங்களுக்கு இடையே உள்ள மக்கள் 

திருமண நிகழ்வுகளுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இ- பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இணைய வழியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் ஏற்காடு ,ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

  நீடிக்கும் தடை முழு விவரம்:



வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தொடர்ந்து தடை நீட்டிப்பு

4 மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்க்கு தடை

சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு


பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி இல்லை. 

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க தடை. 

ஜவுளிகடைகள் திறக்க தடை

மால்கள் திறக்க தடை

தியேட்டர்கள் திறக்க தடை

நகைகடைகள் திறக்க தடை

மேலும் முழு விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1-pSKxco9N8gRqyHNWzDtDQuTnV3tmwgV/view?usp=sharing


 

 



 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback