Breaking News

மாட்டிறைச்சி விற்கக்கூடாது என எச்சரித்த வட்டாட்சியர் இடமாற்றம் : வைரல் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என வட்டாட்சியர் எச்சரித்தது குறித்து விசாரணை நடத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் துளுக்கமுதுர் அருகே உள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகளை நடத்தி வரும் வேலுசாமி என்பவரை அவிநாசி வட்டாட்சியர் சுப்ரமணி, இனி மாட்டு இறைச்சி விற்க கூடாது என கூறி எச்சரித்து உள்ளார். 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் வேலுசாமி னைவரும் இறைச்சி விற்பனை செய்வதை நிறுத்தினால் தானும் நிறுத்துவதாக வேலுச்சாமி கூற, சட்டம் தெரியாமல் இங்கு வந்து பேசவில்லை, மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது என கண்டிப்புடன் கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த விவகாரம் பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்

இந்த நிலையில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளிக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback