Breaking News

இந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் புதிய IFSC கோடு அப்டேட் செய்யுங்க

அட்மின் மீடியா
0

ஆந்திரா வங்கி , ஓரியண்டல் வங்கி , அலகாபாத் வங்கி , சிண்டிகேட் வங்கி , யுனைடெட் வங்கி , கார்ப்பரேஷன் வங்கி  இந்த  6 வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களின் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டுமென தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) துறை அறிவுறுத்தி உள்ளது. 

 


வங்கிகள் இணைப்பு காரணமாக, வங்கிகளின் ஐஎப்எஸ்சி கோடு மாறி உள்ளது. பழைய ஐஎப்எஸ்சி கோடுகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல் இழந்துள்ளன. 

இதனால் பி.எப் கணக்கில் மேற்கணட் 6 வங்கிகளின் தகவலை இணைத்தவர்கள் தங்களின் வங்கியின் புதிய ஐஎப்எஸ்சி எண்ணை வங்கியில் இருந்து பெற்று, அதன் விவரங்களை புதுப்பிக்குமாறு இபிஎப்ஓ அறிவித்துள்ளது


புதுப்பிப்பது எப்படி?

 

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் UAN  மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு laak in seyyavum

அதில் மேனேஜ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கேஒய்சி என்பதை தேர்ந்தெடுக்கவும். 

 

அதில் வங்கி விவரங்களுக்கான பிரிவை தேர்வு செய்து, அதில் ஐஎப்எஸ்சி எண்ணை பதிவிட்டு சேமிக்கவும். அவ்வளவுதான்


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback