5 மாநிலங்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசு : உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த முஸ்லிம் லீக் வழக்கு
முஸ்லிம் அல்லாத ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சில மாவட்டங்களில் வசிக்கும் நபர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது .
இந்தியாவில் பல நாடுகளில் இருந்து ஏராளாமானோர் பல ஆண்டுகளாக அகதிகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சில குறிப்பிட்ட விதிகளின் கீழ் குடியுரிமை வழங்கப்படும். தஞ்சம் புகுந்துள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவில் தங்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். பிறகு அவர்கள் இந்தியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற கடந்த 1995 மற்றும் 2009ல் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019ல் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்நிலையில் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு தற்போதைய விதிகளின் கீழ் குடியுரிமை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த அகதிகள் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2009 ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசி இந்த அறிவிப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் CAA க்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகிய முதல் கட்சி IUML என்பது குறிப்பிடத்தக்கது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில்,
'குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஏற்கெனவே நடந்த வழக்கு விசாரணையில் அந்த சட்டத்துக்கான விதிகள் உருவாக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியது.
இப்போது, முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆனால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் வழி வகை இந்த சட்டம் ஒரு தலைபட்சமானது என்றும்
இது செயல்படுத்தப்பட்டால் குடியுரிமை திருத்த சட்டமே இல்லாமல் அகதிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமே குடியுரிமை வழங்கப்படும். எனவே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு முடியும் வரை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது. மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கூடிய விரைவில் விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Source:
Tags: தமிழக செய்திகள்