ஊரடங்கில் வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது
இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும், ஜூன் 13-ஆம்தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளா்கள் குழுமம் அறிவித்துள்ளது.
அதன்படி
வங்கிக் கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிகளில் பணப் பரிவா்த்தனை நேரம் ஏற்கெனவே அறிவித்தது போல பிற்பகல் 2 மணி வரை செயல்படும். என தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்