சீனாவில் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டடம் கட்டி முடிப்பு !! வியப்பூட்டும் வீடியோ முழு விவரம்
சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டிமுடிக்கபட்ட 10 மாடி கட்டிடம் : வீடியோ
சீனாவின் சாங்ஷா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த 10 மாடிக் கட்டடத்தை பிராட் குரூப் நிறுவனம் 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்துள்ளது.
மேலும் இந்தக் கட்டிடத்தைக் கட்டும் 4 நிமிட வீடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது.
அதில், கட்டுமானப் பணி. குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, சுவர்கள், ஜன்னல்கள், கதவுகளை தனித்தனியாக உருவாக்கி, அலமாரிகள், சமையல் கூடங்களையும் அதற்கான தொழிற்சாலைகளில் தயாரித்து தயாராக வைத்துக் கொண்டு, இந்தக் கட்டுமானம் தொடங்கியுள்ளது.
கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகளை ஒன்றன் அருகே ஒன்று வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி, ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானம் முழுமையாக முடிந்ததும், அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
https://www.youtube.com/watch?v=you-BV35B9Y
Tags: வைரல் வீடியோ