27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு எனத் தகவல்
கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்தமாக உள்ளதாகவும் இந்த வார இறுதிக்குள் பேருந்து இயக்கத்தை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இருக்கும் வகையில் இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன
அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்கள் தவிர, 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 15, 2021
அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டதும் அரசு பேருந்துகள் இயங்கும். இந்த பேருந்து சேவை மாவட்டத்திற்குள்ளேயே இயங்கும் எனத் தகவல்.#TamilNadu #TNLockdown
Tags: தமிழக செய்திகள்