Breaking News

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றெடுத்ததாகக் கூறிய பெண் கைது எல்லாமே பொய்யாம்

அட்மின் மீடியா
0

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக பொய் சொன்ன தென் ஆப்பிரிக்க பெண், கைது செய்யப்பட்டுள்ளார் 

தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில், கோசியாம் தாமரா சிட்ஹோல், 37, என்ற பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக கடந்த வாரம் செய்தி வெளியானது.

மொத்தம் மூன்று பெண் மற்றும் ஏழு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், நலமுடன் உள்ள குழந்தைகள் மருத்துவ கண்காணிப்புக்காக, 'இன்குபேட்டரில்' வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இது உலக சாதனையாக கருதப்பட்டது. ஏன் என்றால் இதற்க்கு முன்பு ஒரே பிரசவத்தில் 9 குழந்தை பெற்றதே உலகசாதனையாக உள்ளது

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சில ஊடகங்கள், இதை உண்மை என தெரிவித்தன. 

ஆனால் 10 குழந்தைகள் வெளி உலகிறகு  இதுவரை காட்டப்படவில்லை.  குழந்தைகளின் படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதில் சந்தேகம் எழுந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். 

சிதோலே என்னும் இந்தப் பெண் 10 குழந்தைகள் பெற்று எடுக்கவில்லை எனவும் 10 குழந்தை பிறந்தாக எந்த மருத்துவமனையிலும் எந்த பதிவும் இல்லை என்று தென் ஆப்பிரிக்க தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் சிதோலே கடந்த ஜூன் 17 ஆம் தேதி அதிகாலை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் வடக்கு நகரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவரது உடலில் பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து 10 குழந்தைகள் பெற்றதாக கதை அளந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரை மனநல மருத்துவமனையில் போலீசார் அனுமதித்து, பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.

Source:

https://www.thesun.co.uk/news/15348150/woman-who-gave-birth-to-ten-babies-in-hospital/

https://www.aa.com.tr/en/africa/south-african-woman-s-claim-of-giving-birth-to-10-babies-hoax-statement/2275292

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback