FACT CHECK: பிரதமர் மோடி கண்ணீர் விட்டதை விமர்சித்து மன்மோகன் சிங் ட்வீட் வெளியிட்டாரா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மோடி கண்ணீர் விட்டது பற்றி விமர்சித்து ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங் என்று ஒரு டிவிட்டர் ஸ்கீரின் சாட்டை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த மன்மோகன் சிங் ஸ்கீரின் சாட் மன்மோகன் சிங் அவர்களின் அதிகாரபூர்வ டிவிட்டர் அக்கவுண்ட் கிடையாது
அந்த டிவிட்டர் அக்கவுண்ட் மன்மோகன் சிங் பெயரில் இயங்கும் போலியான ஒரு ட்வீட்டர் ஐடி ஆகும்
அதிகாரபூர்வ டிவிட்டர் அக்கவுன் என்றால் நீலநிற டிக் இருக்கும் அதில் கிடையாது
ஆனால் பலரும் அந்த டிவிட்டர் செய்தியினை மன்மோகன் சிங் வெளியிட்டதாக ஷேர் செய்து வருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி