Breaking News

FACT CHECK மத்திய அரசு கொரானாவால் உயிரிழந்தால் 4 லட்சம் நிவாரணம் என்ற செய்தியை யாரும் நம்பாதீர்கள்: உண்மையை தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நமது மத்திய அரசானது கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் நிதி உதவி வழங்கிக் கொண்டு உள்ளது. அதற்கான படிவத்தை நான் மேலே இதனுடன் இணைத்து உள்ளேன். நமக்கு தெரிந்த உறவுகள் யாரேனும்   குரானா பாதிக்கப்பட்டு உயிர் இழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இந்த நிதியானது பெரும் உதவியாக இருக்கும். தயவு செய்து அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது, ஆதாரமில்லாதது, மத்திய அரசு இது போல் ஒரு திட்டத்தை இதுவரை அறிவிக்கவில்லை,

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த விண்ணப்பபடிவமும் பொய்யானது

இதனை மத்திய அரசின் அதிகாரபூர்வ செய்தி முகமை தனது டிவிட்டர் பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback