சென்னையில் அம்மா உணவகத்தில் தாக்குதல் வீடியோ
சென்னையில் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் திமுக துண்டுடன் அடையாளம் தெரியாத சில நபர்கள் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தி அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா படம் பொறித்த பேனரை அடித்து உடைத்தனர்.
இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து திமுக முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் ட்விட்டரில்
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அந்த இருவரை கழகத்திலிருந்து நீக்கவும் கழகத்தலைவர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக சார்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அம்மா உணவக போர்டை உடைத்தெறிந்த திமுக தொண்டரக்ள் இருவரும், திமுக நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் உடைத்தெறிந்த போர்டை அதே இடத்தில் வைத்து ஆணி அடித்து சரி செய்கின்றனர்.
ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.. pic.twitter.com/SAMdgVApDh
— DJayakumar (@offiofDJ) May 4, 2021
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்... pic.twitter.com/8FjmbSzTgS
— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2021
Tags: வைரல் வீடியோ