Breaking News

நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு


இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தமிழகம், புதுச்சேரியில் மறு உத்தரவு வரும்வரை கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. கைதிகளை சிறையில் அடைப்பதற்கான உத்தரவைத் தவிர்த்து, பிற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. 

வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் முன் அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்படுகிறது. 

நீதிபதிகளிடம் முன் அனுமதிப் பெற்ற பிறகே நீதிமன்ற வளாகத்திற்குள் வர வேண்டும். வழக்கறிஞர்கள், வழக்காடிகள் அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களுக்கு வரத் தடை விதிக்கப்படுகிறது. 

நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் தேவையின்றி நீதிமன்ற கட்டடத்துக்குள் நுழைய வேண்டாம்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback