Breaking News

வறுமையில் சாலையில் சாக்ஸ் விற்ற சிறுவன்: நேர்மையை விடாத சிறுவன் உதவிக்கரம் நீட்டிய பஞ்சாப் முதல்வர்

அட்மின் மீடியா
0

 பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 வயது சிறுவன் ஒருவன் சாலைகளில் சாக்ஸ் விற்றுக்கொண்டிருந்த வீடியோ வைரலான நிலையில், அந்தச் சிறுவனைத் தொடர்பு கொண்டு உதவிகளை அறிவித்துள்ளார் முதல்வர் அமரீந்தர் சிங்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வன்ஷ் சிங் என்ற 10 வயது சிறுவன் வறுமையின் காரணமாக சாலைகளில் சாக்ஸ் விற்றுக்கொண்டிருந்தான். 

அந்தச் சிறுவனிடம் சாக்ஸ் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் சிறுவனுக்கு  கூடுதலாக ரூ.50 வழங்க முற்பட்டபோது அந்தச் சிறுவன் அதைப் பெற மறுத்துவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

இந்த வீடியோவை பார்த்த  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உடனே அச்சிறுவனைப் பற்றி அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார் 

அதன் பின்பு அச்சிறுவனுடன்  வீடியோ கால் மூலம் பேசினார்.அந்தத் சிறுவனின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

 மேலும், சிறுவனின் கல்விச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்கும் என்றும் உறுதியளித்தார். 

வறுமையிலும் சிறுவன் காட்டிய நேர்மையும், சுயமரியாதையும் தன்னை ஈர்த்ததாக முதல்வர் தெரிவித்தார். 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback