Breaking News

விரைவில் மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு அறிமுகம் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள்  நுகர்வோரிடம் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கபடமாட்டாது எனவும்  மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும்  மாதாந்திர மின் கணக்கீடு என்பது படிப்படியாக அமலுக்கு வரும். திமுக அறிக்கையில் குறிப்பிட்டவாறு தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback