வாட்ஸ்அப்பில் தகவல் தந்தால் வீட்டிற்கே வரும் மருந்து: தமிழகம் முழுவதும் ஏற்பாடு
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித மருத்துவம் சார்ந்த தேவைக்கும் வாட்ஸ்அப்பில் 93420 66388 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பினால் 2 மணி நேரத்தில் வீட்டிற்கே வந்து மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை 93420 66388 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கொடுக்க வேண்டும். முகவரியையும் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், அடுத்த 2 மணி நேரத்துக்குள்ளாக மருந்துகள் வீட்டுக்கே வந்துவிடுமாம்.
மருந்து தேவை, மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு தங்கள் தேவையை, முகவரியுடன் கூறினால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் கிடைக்கும் வகையில் புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்