ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது
அட்மின் மீடியா
0
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது மேலும் இந்த நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை பாஜக இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி, பாஜகவின் இளைஞரணி பக்கத்தில் இந்த மிரட்டலை வெளிப்படையாக விடுத்தார். அதில், தமிழகத்தில் 4 தொகுதிகளில் பாஜக வென்றுவிட்டது. தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது. இதற்காக உழைத்த அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும் நன்றி. தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினர் எல்லோருக்கும் விரைவில் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸின் மரண செய்தி வரும் என நினைக்கிறேன், என்று சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டு இருந்தார்.
தஞ்சை பாஜக இளைஞரணியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சையானது. வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் எம்எல்ஏ ஒருவருக்கு எதிராக பாஜகவினர் இப்படி கொலைமிரட்டல் விடுத்த செய்த பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிதான நிலையில் பாஜக நிர்வாகி மீது தஞ்சை மாவட்ட காவல்துறை பல்வேறு வழக்குகளின் கீழ் பதிவு செய்தது.
கொலை மிரட்டல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து நேற்று இரவோடு இரவாக அந்த பாஜக நிர்வாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Tags: தமிழக செய்திகள்