அண்ணா பல்கலை மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..!!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் மற்றும் மே 2021 பருவத்தேர்வுகளும் மேற்கண்ட முறையில் நடைபெறும். பிப்ரவரி 2021 காலத்தில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது.
மறு தேர்வை தோல்வி அடைந்தவர்களுடன், வெற்றி பெற்றவர்களும் எழுதலாம் எனவும், பிற மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை. பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விருப்பம் இருப்பவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் " என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்