Breaking News

இத்தாலியில் 40,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த நியாண்டர்தால் 9 மனிதர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

அட்மின் மீடியா
0

நியண்டர்தால் மனிதன் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். 

சுமார் 40, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.நியண்டர்தால் மனிதனின் மாதிரி உருவம் நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். 

                                                                             கோப்புபடம்

இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான். 

இத்தாலியின் ரோம் நகரின் தென் கிழக்கு பகுதியில் கழுதை புலிக்களால் வேட்டையாடப்பட்ட ஒன்பது நியாண்டர்தால் மனிதர்களின் உடல் எச்சங்களை வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய குகை ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த குகை பழங்காலத்தில் நடைபெற்ற ஒரு நிலநடுக்கத்தாலோ, நிலச்சரிவாலோ மூடப்பட்டுவிட்டது. அதுவே அதனுள் இருந்த உடல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணமாகவும் அமைந்தது.

source

https://www.bbc.com/news/world-europe-57044002 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback