சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய அரசு
அட்மின் மீடியா
0
மத்திய அரசு அனுமதித்துள்ள விமான போக்குவரத்து தவிர மற்ற சர்வதேச விமானங்களுக்கு 2021 ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 31 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மத்திய அரசு அனுமதித்துள்ள விமான போக்குவரத்து தவிர மற்ற சர்வதேச விமானங்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு சில விமானங்கள் மட்டும் மத்திய அரசின் அனுமதியுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடை இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்