கூரை வீடும் 3000 ரூபாயும் வைத்து கொண்டு வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து
திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளார் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 29102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
த
ிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனித் தொகுதி வேட்பாளர் 49 வயதான மாரிமுத்துக்கு கடுவுக்குடி என்ற கிராமம் தான் இவர் சொந்த ஊர் இவர் தன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனக்கு குடிசை வீடுமட்டும் தான் எனவும் ரொக்கப்பண மதிப்பு ரூ.3000, வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது.என தெரிவித்து இருந்தார்
இவரது தாயரும் மனைவி ஜெயசுதாவும் விவசாயக கூலி தொழில் செய்கின்றனர். மகனும், மகளும் பள்ளியில் படிக்கின்றனர். வீட்டில் கேஸ் அடுப்பு கிடையது. மண் அடுப்பில்தான் சமையல் செய்கின்றனர்.
இவர் பெற்ற வாக்குகள்
அ.இ.அ.தி.மு.க சுரேஷ்குமார் 66683 தோல்வி
சிபிஜ மாரிமுத்து 95785 வாக்குகள் பெற்று வெற்றி
Tags: தமிழக செய்திகள்