FACT CHECK சவூதி மன்னர் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த முஸ்லீம் ஹரம் சரீஃப்பில் போலீஸ்களால் சுட்டு கொல்லப்பட்டாரா?? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவூதி மன்னர் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்த முஸ்லீமை ஹரம் சரீஃப்பில் வைத்து சவூதி போலீஸ்களால் சுட்டு கொல்லப்பட்டார்.... என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்த சம்பவம் குறித்து சவுதி அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள செய்தியில்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 30.03.2021 அன்று மக்கா பள்ளியில் நடந்தது
மக்கா பள்ளியின் முதல் மாடியில் திடிரென ஒருவர் கையில் கத்தி வைத்து கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதாரவாக கத்தினார், உடனடியாக மக்கா பள்ளி காவலர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்துள்ளார்கள்
அந்த சம்பவத்தை யாரோ வீடியொ எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்து உள்ளார்கள்
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் யாரோ ஒருவர் கத்தும் சத்தம் கேட்கின்றது ஆனால் துப்பாக்கி சத்தம் கேட்கவில்லை, ஆனால் அந்த வீடியோவுடன் ஷேர் செய்யப்படும் ஆடியோவில் அவரை சுட்டு கொன்று விட்டார்கள் என பொய்யாக ஷேர் செய்கின்றார்கள்
மேலும் பலரும் ஷேர் செய்யும் ஆடியோவில் இது நபியவர்களின் முன்னறிவிப்புக்களில் ஒன்று என ஷேர் செய்கின்றார்கள்
எமக்கு தெரிந்தவரை இது போல் ஓர் முன்னறிவிப்பு என்பதற்க்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
تم القبض🤏🏻🤏🏻🤏🏻 #داعشي_في_الحرم_المكي pic.twitter.com/G6EOfRuc4H
— هـَ (@elss7ii) April 1, 2021
அவர் கையில் எந்த வித ஆயுதங்களும் இல்லை அவர் கையில் கத்தி வைத்து கொண்டு அவர் கத்தி கொண்டே செல்லும் வீடியோவும் அவரை போலிஸார் பின் தொடரும் வீடியோ
لم ينتشر الذعر والخوف في تاريخ أطهر بقعة في الأرض الحرم المكي الشريف الا من الدواعش وأصحاب الفكر الإرهابي .
— عَزيزز (@azizsubhi94) April 1, 2021
حسبي الله ونعم الوكيل
#داعشي_في_الحرم_المكي pic.twitter.com/auLHd5G6qc
Tags: FACT CHECK மறுப்பு செய்தி