சென்னையில் தனியார்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம்: பிரகாஷ் பேட்டி
அட்மின் மீடியா
0
சென்னையில் தனியார் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் கோவிட்19 நோயாளிகள் பராமரிப்பு மையங்களை தொடங்க முன் அனுமதி தேவையில்லை என்றும் தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் அறிவித்துள்ளார்.
கோவிட் நோயாளிகள் பராமரிப்பு மையங்களை தனியார் தொடங்கியபின், jagadeesan.gcc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பினால் போதும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது
மேலும் சென்னையில் தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்