Breaking News

ஆசிரியர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது

அட்மின் மீடியா
0

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் கல்லூரி ஆசிரியர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என்று அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

மேலும் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி, பெரும்பாலான கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக, பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைப்பதாகப் புகார் எழுந்ததுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback