Breaking News

இஸ்லாமியர்களுக்கு ஜமா அத்துல் உலமா சபையின் வேண்டுகோள்

அட்மின் மீடியா
0
கண்ணியமிகு ஆலிம் பெருமக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதை கருத்தில் கொண்டு 30-04-2021 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடை ஆணை வெளியிட்டுள்ளது.

அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் விதத்தில் அரசு ஆணையை ஏற்று வரும் 30-04-2021 வரை அனைத்து தொழுகைகளையும் தங்களது வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



பள்ளிவாசல் பணியாளர்கள் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதியுள்ளதால்,ஐங்காலத் தொழுகைகளையும் தராவீஹ் தொழுகையையும் பள்ளிப் பணியாளர்களைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளவும். பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்வுகள் நடத்த வேண்டாம். கஞ்சி காய்ச்சுபவர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்களுக்கு வழங்கி விடவும்.

வஸ்ஸலாம்...

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback