Breaking News

சவுதி பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம்! - புதுமை புகுத்தும் இளவரசர்!

அட்மின் மீடியா
0

இந்து மத புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களும் சவுதியில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க அந்நாட்டி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 



சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் விஷன் 2030 என்ற திட்டத்தின் கீழ்  சவுதி அரேபியாவில் பல் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இளவசர் முகமது பின் சல்மானின் திட்டப்படி பாடத்திட்டத்தில் இந்திய புராண, இதிகாசங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதி மாணவர்கள் பல்வேறு நாட்டின் கலாச்சாரம், புராண, இதிகாசங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இந்தியாவிலிருந்து பௌத்தம், இந்துத்துவம், ராமயணம், மகாபாரதம் உள்ளிட்டவையும் அந்த பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சவூதி அரேபியாவின் முதல் யோகா ஆசிரியரும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் வென்ற நவுப் அல்மார்வாய், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில்

சவூதி அரேபியாவின் புதிய விஷன்-2030 ல் தாராளமயமான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்க உதவும். சமூக ஆய்வுகள் புத்தகத்தில் இன்று எனது மகனின் பள்ளித் தேர்வில் இந்து மதம், பௌத்தம், ராமாயணம், கர்மா, மகாபாரதம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் கருத்துகள் மற்றும் வரலாறு ஆகியவை குறித்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இது அவனுடைய படிப்புக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்” எனத் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் பள்ளியில் கேட்கபட்ட கேள்விகளையும் ஸ்கீரின் ஸாட் இனைத்துள்ளார்


SOURCE: 

http://muslimmirror.com/eng/saudi-arabia-includes-ramayana-mahabharata-and-other-nations-literature-in-its-curriculum/

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback