ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்டு வேலை இல்லாமல் ஒரே ஃப்ளாட்டில் 64 இந்தியர்கள் தங்கிய அவலம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறிய ஏஜென்ட்டை நம்பி அமீரகத்
திற்கு வந்த 64 இந்தியர்கள் தற்பொழுது மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விசிட் விசாக்களில் வந்த அவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏஜெண்ட்டால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
அமீரகத்தில் உள்ள சமூக சேவகர் ஷிராலி ஷேக் முசாஃபர், ஷார்ஜாவின் சாலையோரத்தில் இவர்களில் சிலர் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி அவர்களின் நிலையைத் தெரிந்து கொண்டு எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த செயல் வெளியே தெரிந்துள்ளது
இது குறித்து சமூக சேவகர் ஷிராலி ஷேக் முசாஃபர் கூறுகையில்:
இந்திய மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார் மற்றும் டெல்லி, மீரட் பகுதியை சேர்ந்த இவர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஏஜெண்ட்களுக்கு பணத்தைக் கொடுத்து வேலைக்கு வந்துள்ளனர்
ஆனால் இவர்களுக்கு வேலை இல்லாமல் ஒரே அறையில் 64 பேரையும் அடைத்து வைத்து சரியாக உணவு கொடுக்காமல் அவர்களது பாஸ்போர்ர்டை பிடிங்கி வைத்து கொண்டு கேள்வி கேட்டால் அடித்து துன்புறுத்தி இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்
அவர்களின் நிலை குறித்து இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து தூதரகம் உடனடியாக செயல்பட்டு, தொழிலாளர்களின் ஆவணங்களை சேகரிக்கத் தொடங்கி ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்குமாறு உத்தரவிட்டது.
அவர்களின் பாஸ்போர்ட்களை திருப்பித் தரவும், இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவோரின் விமான டிக்கெட்டுகள் மற்றும் கொரோனா சோதனைகளுக்கு ஏற்பாடு செய்யவும் கன்சல்டன்சிக்கு தூதரகம் வலுயுறுத்தியது.
அவர்களில் பலர் இந்தியாவுக்குத் திரும்ப விரும்பவில்லை எங்களுக்கு வேலை கிடைத்தால் பணி புரிய தயாரக உள்ள்ளோம் என்று கூறினார்கள் அதில் 22 பேர் நாங்கள் எங்கள் ஊருக்கு செல்கின்றோம் என்று கூறியதை அடுத்து 22 பேரை திருப்பி அனுப்ப முடிந்தது மேலும் ஏமாற்று ஏஜென்சி 18 தொழிலாளர்களுக்கு மட்டுமே விமான டிக்கெட் ஏற்பாடு செய்தது
அதன்பின்பு தனது சொந்த பணத்தில்நான்கு பேரின் டிக்கெட் அளித்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்லார்கள் என கூறினார்
image and source courtsey
Tags: வெளிநாட்டு செய்திகள்