Breaking News

மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி வீடியோ..!

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரத்தின் நாசிக் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.


 

நாசிக் மாவட்டத்தில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாசிக்கசிவு ஏற்பட்டு டேங்கரில் இருந்து ஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. 

இதனால் நோயாளிகளுக்கு சரிவர ஆக்ஸிஜன் வழங்கமுடியாததால், அங்குள்ள 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்ஸிஜன் வாயுவைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த மருத்துவமனையை சுற்றியும் ஆக்சிஜன் வாயு புகை மண்டலமாக காட்சியளித்தது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback