Breaking News

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரவு 10 மணி வரை அனுமதிக்க வேண்டும் : அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை

அட்மின் மீடியா
0

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரவு 10 மணி வரை அனுமதிக்க வேண்டும் : அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை


தமிழக அரசு இன்று வெளியிட்ட கரோனா கட்டுப்பாடு அறிவிப்பில் அனைத்து வழிபாட்டு தளங்களும் இரவு 8  மணி வரை மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்

 


 

ஏனெனில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்களும் நோன்பு இருந்து வழக்கம் போல் 5 வேலை தொழுகை நடத்துவார்கள.மேலும் ரமலான் மாதத்தில் இரவு 8 மணிக்கு மேல்  தராவீஹ் எனும் சிறப்பு தொழுகை கூடுதலாக தொழப்படும் இது இஸ்லாமி வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது ஆகும்

 

எனவே ரமலான் இரவு தொழுகைக்கு  30 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக 10 மணி வரை தொழுகை நடந்த அனுமதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்


தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 


இன்று (08.04.2021.)  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல்வர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அப்போது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் Dr. அன்வர் பாதுஷாஉலவி, துணைச் செயலாளர் இல்யாஸ் ரியாஜி, சென்னை மாவட்ட தலைவர் அபூதாஹிர் சிராஜி ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மனுவை அளித்தனர்.

 

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . 

மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க இயலாதது என்பதால் இதை வரவேற்கிறோம். 

அதே சமயம் வழிபாட்டுத்தலங்களுக்கு சில விலக்குகள் தேவை என்பதையும் தமிழக அரசு உணர வேண்டும். வழிபாட்டு மையங்கள் என்பது மக்கள் மன அமைதி பெறும் இறையில்லங்களாக இருப்பதால் அங்கு மக்கள் கட்டுப்பாடுகளுடன் வந்து செல்வதற்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும்.

குறிப்பாக புனித ரமலான் மாதம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்குவதால், மக்கள் இரவு நேர வழிபாட்டை நடத்தும் வகையில் இரவு 10 மணி வரை மசூதிகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

https://mjkparty.com/?p=27842


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்


தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

புனித ரமமலான் மாதம் வரும் 14ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் சிறப்பு தொழுகை நடத்த  பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் அவர்கள்


தமிழக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார் அதில் 

கோவிட்-2 வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி மதவழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்.14 முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது. இம்மாதத்தில் அதிகமான அளவு இரவுநேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். 

என்பதால், இரவுநேர ஊரடங்கை இரவு 8 மணியிலிருந்து, இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் இ.முஹம்மது அவர்கள் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில்


தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து புதிய கட்டுப்பாடுகளை எதிர்வரும் 10-ம் தேதி முதல் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது.

அதில் குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் இரவு நேர வழிபாடு உட்பட ஐந்து வேலையும் இறைவணக்கம் செய்பவர்கள்.

அதிலும் குறிப்பாக புனித ரமளான் மாதத்தில் கூடுதலாக இரவு நேரத்தில் வணக்க வழிபாடுகளில் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஈடுபடுவார்கள் என்பது  தாங்களும் அறிந்த ஒன்றே.

இதை கவனத்தில் கொண்டும் அதே சமயம் நோய்பரவலை எதிர்கொள்ளும் வகையிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் புனித ரமளான் மாதத்தில் (ஏப்ரல் 13 முதல் மே 15 வரை ) இரவு 10 மணி வரையிலும் வழிபாடுகள் நடந்திட  உரிய உத்தரவையும் வழிகாட்டுதலையும் வழங்குமாறு இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback