Breaking News

FACT CHECK தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததா ?உண்மை என்ன??

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நாடு முழுவதும் தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் செல்ல ஏதுவாக அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ்நாடு எனும் பெயர் தேசிய மொழியில் “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததாக ஒரு செய்தியை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

உண்மையில் தமிழக பாஜக வெளியிட்ட 2021 தேர்தல் அறிக்கையில் அப்படி எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது தான் உண்மை

மேலும் பலரும் ஷேர் செய்யப்படும் இமேஜ் போட்டோஷாப் செய்து எடிட் செய்யபட்ட புகைப்படம் ஆகும்

தமிழக பாஜக அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பலரும் ஷேர் செய்யப்படும் புகைபடத்தின் அசல் இருந்தது  அதில், ” விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன். விவசாயத்திற்கென தனி பட்ஜெட், வட்டியில்லா பயிற்கடன், விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய நிலை நிர்ணயக் குழு, தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் ’விவசாய நீர் பாசன துறை’ உருவாக்கப்படும் ” என இடம்பெற்று இருந்தது

அந்த இமேஜ்ஜை எடுத்து அந்த வாசகத்தை நீக்கி நாடு முழுவதும் தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் செல்ல ஏதுவாக அனைவருக்கும் புரியும் வகையில் தமிழ்நாடு எனும் பெயர் தேசிய மொழியில் “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றப்படும் என்று பொய்யாக பரப்பி வருகின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback