Breaking News

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை: முழு விவரம்: வீட்டுக்கு ஒருவருக்கு வேலை,ஆண்களுக்கு டூ வீலர் வழங்க மாணியம்

அட்மின் மீடியா
0
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமமுக சார்பில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.  இந்த பொதுக்கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாவுதீன் ஒவைசி,  எஸ்டிபிஐ தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.இ.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணிக் கட்சியினரின் முன்னிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.



எங்கள் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும்  அம்மா பொருளாதார புரட்சித் திட்டம்” என்கிற திட்டத்தை குறிப்பிட்டுள்ளோம். இளைஞர்கள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை பெறும் வகையில் இத்திட்டம் இருக்கும்

ஆண்களுக்கு டூ வீலர் வழங்க மாணியம். 

அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விரிவாக்கப்படும். குறைந்தபட்சம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.

 இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு 5%-ஆக உயர்த்த நடவடிக்கை

வி.வி.ஐ.பிக்கள் பயணிக்கும் போது, சாலைகளில் பெண் காவலர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள்

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 

தண்டனை காலம் முடிந்து சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் விடுவிக்கப்படுவார்கள். 

மாவட்டந்தோறும் பத்திரிக்கையாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்

விவசாயிகளுக்கு வீடுதேடிவரும் உரம் கொண்டு வந்து தரப்படும் 

மாதம் ஒரு மாவட்டத்தில் முதலமைச்சர் நேரடியாக பங்கேற்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும் 

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் மாதம் 4 முறை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. பங்கேற்கும் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும் 

அம்மா கிராமப்புற வங்கிகள், சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன், 

நெல் குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்கப்படும், 

ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

கியாஸ் சிலிண்டருக்கு தலா ரூ.100 மானியம் வழங்கப்படும்.

கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கப்படும்

தமிழக வேலைவாய்ப்பில் 85% தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டம் கொண்டு வரப்படும்

திருமண உதவித்தொகை 25 ஆயிரத்தில் இருந்து 50,000- ஆகவும், 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

தமிழ்நாட்டில் சட்ட மேலவை மீண்டும் உருவாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்

 என டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
















Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback