Breaking News

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

அட்மின் மீடியா
0

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று வெளியிட்டது அதிமுக.அதிமுக- வின் தேர்தல் அறிக்கையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வெளியிட்டனர்

அம்மா வாஷிங் மெஷின் திட்டம்

ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்.

100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும்.

அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்

மகளிருக்கு பேருந்துச் சலுகை

தொலை நோக்கு திட்டம் 2023

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம்

அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் அடுப்பு

மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜி டேட்டா

வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு

முதியோர் ஓய்வூதிய திட்டம் 2000 ஆக உயர்வு

திருமண உதவி திட்டம் உயர்வு

கொசுவலை வழங்கும் திட்டம்

மத்திய அரசுப்பணியில் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை

கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விலையில்லா கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்படும்

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை

மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் இலவசமாக வழங்கப்படும்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆண்டுக்கு வீட்டிற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 1,500இல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்.

குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ. 1,500 குடும்பத்தலைவியிடம் வழங்கப்படும்.

முதியோர் பென்ஷன் ரூ. 2,000ஆக உயர்த்தப்படும்.

கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி.

மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும்

அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

 இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்.

ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் 2500 ருபாய் உதவித்தொகை திட்டம் தொடரும்.

தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு 200மி.லி. பால் வழங்கப்படும்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback