Breaking News

உயர்நீதிமன்றத்திற்குள் அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி... உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் மார்ச் 8-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


ென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை வருகின்ற 8-ஆம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த மூடல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை Law Chambers மூடப்படுவதால் நாளை வரை அறைகளில் உள்ள தேவையான ஆவணங்களை எடுத்துக்கொள்ளும்படி வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  



 

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் சில வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட்டாலும், நீதிமன்ற பணிகள் வழக்கம்போல செயல்படும் எனகூறப்பட்டுள்ளது. மற்ற வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback