Breaking News

கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா

அட்மின் மீடியா
0

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் ரோந்து படைகளும் , பறக்கும் படைகளும் செயல்பட்டு வருகின்றன .கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

உரிய ஆவணமின்றி  வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்றனர்.ஆனால் அதனையும் தாண்டி தொழில்நுட்பங்கள் மூலம் பணம் பட்டுவாடா நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுபோன்ற பணப்பரிமாற்றங்களை தடுப்பதற்காக வங்கிகளின் மூலம் பணம் பரிவர்த்தனையை கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை தடுக்க தனி குழுவை நியமித்திருப்பதாகவும்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback