Breaking News

பாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம்

அட்மின் மீடியா
0

 பாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் இன்று  வெளியிட்டார்.

 

 

  தேர்தல் அறிக்கை  சிறப்பம்சங்கள்:

 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி

விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் வருடாந்தர உதவித்தொகை ₹6000 வழங்கப்படும்

8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500 ஆக நிர்ணயம்

பூரண மதுவிலக்கு

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2022 க்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும்.

நிலத்தடி நீர்மட்டம் உயரவும், ஆறுகளில் நீரோட்டம் சீராக இருக்கவும், முற்றிலுமாக 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும்.

தமிழக மேல்சபை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கும் இலவச பேருந்து பயணச்சீட்டு சலுகை வழங்கப்படும்.

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்படும்.

மணல் இறக்குமதிக்கு அனுமதி.

மின்னணு குடும்ப அட்டை தாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேடியாக வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சி 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்

நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும்

18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம். 

விதவைகள் நலவாரியம் அமைக்கப்படும். விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும்

பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றும் கோவில் ஊழியர்கள் பணி நிரந்தம் செய்யப்படுவர்

இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.

 

 

 தேர்தல் அறிக்கை PDF

https://drive.google.com/file/d/1tIHHEbMyKZc0mNCAlfCHtrXftLKwVzeH/view

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback