FACT CHECK குஜராத் BJP. MP பூனம் பென் 10 கோடி செலவில் போடப்பட்ட 10 மீட்டர் சாக்கடை என பரவும் செய்தியின் உண்மை என்ன?
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் குஜராத் BJP. MP பூனம் பென், தனது தொகுதியில் 10 கோடி செலவில் போடப்பட்ட 10 மீட்டர் சாக்கடை திட்டத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த போது இடிந்து விழுந்தது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
கடந்த 16.05.2016 அன்று குஜராத்தின் ஜாம் நகர் என்ற பகுதியில் குடிசைவாழ் மக்கள் வாழும் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர் இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் பேசுவதற்காக எம்.பி பூனம் வந்தார்.
அங்கு கழிவு நீர் கால்வாய் மீது போடபட்டு இருந்த ஒரு ஸ்லாப் மீது நின்றபடி மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்லாப் உடைந்ததில் பூனம் எட்டு அடி ஆழம் கொண்ட கால்வாயில் விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது அவ்வளவுதான்
ஆனால் சிலர் அந்த சம்பவம் ரூ.10 கோடியில் 10 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட சாக்கடையைத் திறக்க அவர் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்று பரப்பி வருகின்றார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
https://www.youtube.com/watch?v=3vzVbqZ7UC4&feature=emb_title
Tags: FACT CHECK மறுப்பு செய்தி