6 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு
அட்மின் மீடியா
0
6 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் ரூ.50 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது..
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்....
தற்போது, சென்னை ரயில்வே கோட்டத்தில் நேற்று முதல் 6 முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்க அனு மதித்துள்ளது.
டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஓர் தற்காலிக நடவடிக்கையாகும் இந்த கட்டண உயர்வு மே 17-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அதில் கூறப்பட் டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்