திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
அட்மின் மீடியா
0
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார் அதனைதொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
Tags: தமிழக செய்திகள்