Breaking News

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தலிலும் போட்டி

அட்மின் மீடியா
0
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளது


ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து  அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் முன்னதாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, தமாகா புதிய நீதிகட்சி, ஆகிய கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. 


திமுக கூட்டணியில் 
 
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
 
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் 
 
 
அதிமுக கூட்டணியில்
 
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 
பாமக கட்சிக்கு 23 தொகுதிகள்

பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback