மக்களே தெரிந்து கொள்ளுங்கள்: இந்த வங்கிகளின் காசோலை ஏப்ரல் 1லிருந்து செல்லாது
புதிய வங்கியின் பெயரில் கணக்கு விபரங்கள் மாற்றம்: 7 வங்கிகளின் காசோலை ஏப்ரல் 1லிருந்து செல்லாது
வங்கிகள் இணைப்பு முறை நடைமுறைக்கு வருவதால் வருகிற ஏப். 1ம் தேதி முதல் கீழ் உள்ள 8 வங்கிகளின் காசோலை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கித் துறையை மேம்படுத்துவதற்காக 10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பெரிய வங்கிகளாக மத்திய அரசு இணைத்துள்ளது.
1.தேனா வங்கி
2.விஜயா வங்கி
பாங்க் ஆப் பரோடாவுடன் இணைந்தன.
3.ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ்
4. யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
பஞ்சாப் நேஷனல் வங்கி உடன் இணைந்தன.
5. ஆந்திரா வங்கி
6 .கார்ப்பரேஷன் வங்கி
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்தன.
7.அலகாபாத் வங்கி
இந்தியன் வங்கியுடன் இணைந்தன.
8 .சிண்டிகேட் வங்கி
கனரா வங்கியுடன் இணைந்தது
இந்த நிலையில், வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதுள்ள தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கி, யுனைடெட் பேங்க், சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய வங்கிகளின் காசோலை புத்தகங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது.
அதனால் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகள் மற்றும் வங்கிப் புத்தகத்தை இதுவரை பெறவில்லை என்றால், வங்கிக் கிளைகளை அணுகி உடனடியாகப் புதிய காசோலைப் புத்தகத்துக்கு விண்ணப்பம் செய்யவும். அவ்வாறு செய்யாவிட்டால் உங்கள் கணக்கில் பணம் இருந்தாலும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு, நீங்கள் கொடுத்த காசோலை செல்லாததாகக் கருதப்படும்.
Tags: தமிழக செய்திகள்