பெற்றோர்களே எச்சரிக்கை: கேரளாவில் யூடியூப் வீடியோவை பார்த்து தலைமுடியை நேராக்க முயன்ற 12 வயது சிறுவன் மரணம் வீடியோ
திருவனந்தபுரத்தில் 12 வயது சிறுவன் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியை பயன்படுத்தி தலைமுடியை நேராக்க முயன்ற போது தீப்பற்றி உயிரிழந்தார்
திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சேர்ந்தவர் சிவநாராயணன். இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். யூடியூப் வீடியோகளை பார்த்து அவற்றை முயற்சி செய்து வந்துள்ளார். ஒருநாள், தலைமுடியை நேராக்க மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டி உபயோகித்த செய்முறை வீடியோவை யூட்டியூபில் பார்த்து அது போலவே தலையில் மண்ணெண்ணெயை தேய்த்து முடியை நேராக்க முயற்சித்துள்ளார்
இதனால் தலையில் தீ பற்றியுள்ளது. அப்போது வலி தாங்க முடியாமல் சிறுவன் கத்தியுள்ளான். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து தீயை அனைத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் வீட்டு குழந்தைகள் என்ன செய்கின்றார்கள் என்று பார்த்து கொண்டு இருங்கள்.அவர்கலுக்கு நல்லது எது கெட்டது என்று சொல்லி கொடுத்து வளருங்கள்
https://www.youtube.com/watch?v=J0AlbLXIbPo
Tags: இந்திய செய்திகள்