Breaking News

அயோத்தியில் புதியதாக கட்டபட்டு வரும் மசூதி நிலத்துக்கு உரிமை கோரிய சகோதரிகளின் மனு தள்ளுபடி: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

அயோத்தியில் மசூதிக்கு ஒதுக்கிய நிலத்தின் உரிமை கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட தனியாக  ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் ஆணையிட்டது

 

அதன்பின்பு அயோத்தியில் உள்ள தனீப்பூா் கிராமத்தில் மசூதி கட்ட மத்திய அரசு 5 ஏக்கா் நிலம் வழங்கியது. அந்த இடத்தில் மசூதி, மருத்துவமனை அடங்கிய வளாகம் கட்ட கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று  பணி துவங்கப்பட்டது. 

 

இந்நிலையில்  அயோத்தியில் புதியதாக மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம்  எங்களுடையது என டில்லியை சேர்ந்த ரமா ராணி மற்றும் ராணி கபூர் சகோதரிகள்   அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்

 

அந்த மனுவில், எங்கள் தந்தைக்கு  1947-ம் ஆண்டு தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த தங்கள் தந்தை கியான்சந்திர பஞ்சாபிக்கு தான்னிப்பூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலம் 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதுதொடர்பான முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளபோது, குறிப்பிட்ட 28 ஏக்கரில் இருந்து 5 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியத்துக்கு அதிகாரிகள் ஒதுக்கிவிட்டனர் மேலும் இந்த சிக்கல் தீர்வுக்கு வரும் வரையில் அதிகாரிகள் சன்னி வக்பு வாரியத்திற்கு நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

 இந்நிலையில் இந்த வழக்கு நேற்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் விசாரனைக்கு வந்தது அதில் 

உத்தரபிரதேச மாநில அரசின் தலைமை வக்கீல் ரமேஷ்குமார் சிங், மனுவுக்கு எதிர்ப்பு கூறி, அதில் குறிப்பிடப்பட்ட நில எண்களும், மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நில எண்களும் வேறு வேறானவை என தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் எச்.ஜி.எஸ்.பாரிகரும், வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக கூறினார்.அடிப்படை தகவல்களை சரிபார்க்காமல் மனு தாக்கல் செய்ததை கண்டித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.கே.உபாத்யாய், மணீஷ்குமார் ஆகியோர் டெல்லி சகோதரிகளின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source:

https://thewire.in/law/allahabad-hc-dismisses-plea-claiming-ownership-of-land-allotted-for-ayodhya-mosque

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback