Breaking News

BREAKING NEWS :மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா!!!!புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்தார்!

அட்மின் மீடியா
0

மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா!!!!புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்தார்!



புதுச்சேரியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் இன்றுய் சபாநாயகரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை வழங்கினார்  இன்று காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார்

மொத்தம் 30 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட  புதுச்சேரி மாநிலத்தில்  நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான் ஆகிய நான்கு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். 

மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள சூழ்நிலையில் இன்று  மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் அவர்களும்  புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார்கள்

புதுச்சேரி மாநில காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பலம் 12-ஆக குறைந்துள்ளது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback